டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை – பயன்கள், அளவு, பயன்படுத்தும் முறை

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டை என்பது முட்டை ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருள். கரும்பு, பருத்தி, நெல், காய்கறி, பழம், பயறு வகைகள், காலிஃபிளவர், முட்டைகோஸ். இதன் சிறப்பு அம்சங்கள், பரிந்துரை அளவு மற்றும் பயன்படுத்தும் முறையை இங்கே எளிய தமிழில் பார்க்கலாம்.

வகை
முட்டை ஒட்டுண்ணி
பிரிவு
இனக்கவர்ச்சிப் பொறிகள், ஒட்டுண்ணி & EPN
கிடைக்கும் அளவுகள்
1 cc

ஏற்ற பயிர்கள்

கரும்பு, பருத்தி, நெல், காய்கறி, பழம், பயறு வகைகள், காலிஃபிளவர், முட்டைகோஸ்.

கட்டுப்படுத்தும் பூச்சி

கரும்பு – இடைக்கணுப்புழு, இளங்குருத்துப்புழு; பருத்தி – காய்ப்புழு; நெல் – இலை சுருட்டுப்புழு; காய்கறி & பழ வகைகள் – குருத்து மற்றும் காய் துளைப்பான்; பயறு வகைகள் – காய் துளைப்பான்; காலிஃபிளவர் & முட்டைகோஸ் – வைர முதுகு பூச்சி.

சிறப்பு அம்சங்கள்

  • ஒரு டிரைக்கோகிரம்மா பெண் குளவி 20 – 40 முட்டைகளை தீமை செய்யும் பூச்சிகளின் முட்டையினுள் இடும்.
  • டிரைக்கோகிரம்மாவின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், தீமை செய்யும் பூச்சியின் முட்டையின் கருவை உண்டு வளர்ந்து அதனை அழித்த பின் முதிர்ந்த குளவிகளாக வெளிவருகின்றன.

பரிந்துரை அளவு

பயன்படுத்தும் முறைபரிந்துரை
கரும்புநடவு செய்த 120 வது நாளில் 1 cc / ஏக்கர்; 10 – 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை கட்ட வேண்டும்
நெல் மற்றும் காய்கறிநடவு செய்த 15 – 30 வது நாள் 2 cc / ஏக்கர்; 10 – 15 நாட்கள் இடைவெளியில் 3 – 4 முறை
பருத்திநடவு செய்த 45 வது நாள் 2 cc / ஏக்கர்; 10 – 15 நாட்கள் இடைவெளியில் 3 – 4 முறை

பயன்படுத்தும் முறை

  1. ஒட்டுண்ணி அட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி இலைகளின் கீழ்ப்பகுதியில் மாலை வேளையில் வயலில் கட்ட வேண்டும்.
  2. காற்று வீசும் திசை நோக்கி வயல் முழுதும் சீராகப் பரவ, காற்று வீசுவதற்கு எதிர் திசையில் கட்டப்படவேண்டும்.
  3. வயல்களில் ஓரங்களில் மட்டும் கட்டுவதைத் தவிர்த்து, உட்பகுதியில் பல இடங்களில் கட்டுவதால் ஒட்டுண்ணிகள் வயலில் சீராகப் பரவும்.
  4. ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டிய பின் 7 – 10 நாட்களுக்குப் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.

பயிர் வாரியான வழிகாட்டிகள்

இதே பிரிவில் உள்ள பிற பொருட்கள்

அன்னை ஆர்கானிக் – துறையூர்
பண்ணாரி அம்மன் பயோ உரங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர். அனைத்துப் பொருட்களும் எங்களிடம் கிடைக்கும்.
📍 3/4, மண்பாறை, துறையூர்  |  📞 9087124293  |  GPay வசதி உண்டு

குறிப்பு: இப்பக்கத்தில் உள்ள அளவுகள் மற்றும் விவரங்கள் பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்தின் “இயற்கை வேளாண் இடுபொருட்கள் கையேடு” (பதிப்பு 2024) அடிப்படையிலானவை. மண் மற்றும் பயிர் நிலைக்கேற்ப வேளாண் அலுவலரின் ஆலோசனை பெறவும்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்