Sugarcane — கரும்பு சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
கரும்பு — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
கரும்பு சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| லார்வா ஹண்டர் | தண்டு துளைப்பான், வேர்ப்புழு | வேர்ப்புழுவுக்கு மண்ணிலும் இடவும் |
| கிரப் ஹண்டர் | வேர்ப்புழு | நடவின் போதும் மண் அணைக்கும் போதும் |
| கிரப் பைட்டர் | வேர்ப்புழு | நடவின் போதும் மண் அணைக்கும் போதும் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| சூடோ கேர் | கரணை அழுகல் | கரணை நேர்த்தி |
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு
| தயாரிப்பு | பருவம் / நேரம் | எப்போது / எப்படி |
|---|---|---|
| பயோசைம் | 45 & 90 நாள் | நீர்ப்பாசனம் — 5–10 லி / ஏக்கர் |
| பயோஜெல் | நடவு + மண் அணைக்கும் போது | ஏக்கருக்கு 15–20 கிலோ |
| ஹியூமிக் K பிளஸ் | நடவு + 60 நாள் | நீர்ப்பாசனத்தில் 2–4 கிலோ |
| பஞ்சகவ்யா கரும்பு / மஞ்சள் | 45 & 90 நாள் | நீர்ப்பாசனம் — 5–10 லி / ஏக்கர் |
| EM நுண்ணுயிர்கள் வாழை / கரும்பு | மாதம் ஒருமுறை | பாசனத்தில் 5–10 லி / ஏக்கர் |
உயிர் உரங்கள்
தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்
| தயாரிப்பு | எப்போது | எப்போது / எப்படி |
|---|---|---|
| நைட்ரோ பிக்ஸ் (குளுக்கனோ அசிட்டோபேக்டர்) | நடவின் போது | கரணை நேர்த்தி — 1 லி / ஏக்கர் |
| நைட்ரோ பிக்ஸ் (குளுக்கனோ அசிட்டோபேக்டர்) | நடவு 30 & 60 நாள் | மண்ணில் / சொட்டுநீர் — 2 லி |
| நைட்ரோ பிக்ஸ் (குளுக்கனோ அசிட்டோபேக்டர்) கரும்பு (கட்டை) | கட்டை விட்ட பின் | மண்ணில் / சொட்டுநீர் — 2 லி |
| P-சால்யுபிளைசர் கரும்பு / வாழை / மஞ்சள் | நடவின் போது | மண்ணில் 2 லி / 4 கிலோ |
| K-மொபிளைசர் | நடவு + மண் அணைக்கும் போது | கரணை நேர்த்தி + மண்ணில் |
| NPK கன்சார்டியா | நடவின் போது | கரணை நேர்த்தி + மண்ணில் |
| சிலிக்கா சால்யுபிளைசர் | நடவின் போது | கரணை நேர்த்தி + மண்ணில் |
அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை
இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.
பொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments
Post a Comment