Root Care — ரூட் கேர் பயன்பாடு & அளவு
ரூட் கேர்
டிரைக்கோடெர்மா விரிடி / ஹார்சியானம் • Root Care
வேரழுகல், கிழங்கழுகல், வாடல் — மண் வழி நோய்களுக்கு. பண்ணாரி அம்மன் நிறுவனத்தின் இந்த உயிர் நோய்க் கொல்லி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. கீழே எப்படி வேலை செய்கிறது, எந்தப் பயிருக்கு எப்போது, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை எளிய தமிழில் கொடுத்துள்ளோம்.
எப்படி வேலை செய்கிறது?
- விதை / மண்ணில்விதை, நாற்று, கிழங்கு நேர்த்தி செய்து, எருவுடன் மண்ணில் இடவும்.
- வேரைச் சுற்றி பெருகும்நல்ல பூஞ்சாணம் வேர்ப் பகுதியில் பெருகி, நோய் பூஞ்சாணத்தைக் கரைத்து அழிக்கும்.
- வேருக்கு அரண்மண் வழி நோய்க் கிருமிகள் வேருக்குள் நுழையாதபடி பாதுகாக்கும்.
படங்கள்



பயிர் வாரியாக பயன்பாடு
| பயிர் | கட்டுப்படுத்தும் நோய் | எப்படி பயன்படுத்துவது |
|---|---|---|
| காய்கறி நாற்றங்கால் | நாற்றழுகல் | நாற்றங்கால் மண்ணில் கலந்து |
| வாழை | வாடல், கிழங்கழுகல் | கிழங்கு நேர்த்தி + மண்ணில் இடுதல் |
| மஞ்சள் / இஞ்சி | கிழங்கழுகல் | நடவுக்கு முன் கிழங்கு நேர்த்தி |
| நிலக்கடலை / பயறு | வேரழுகல் | விதை நேர்த்தி |
| பருத்தி | வேரழுகல், வாடல் | விதை நேர்த்தி + மண்ணில் இடுதல் |
| மிளகாய் / தக்காளி | நாற்றழுகல், வாடல் | நாற்று வேர் நனைத்து நடவு |
| தென்னை / பாக்கு | அடித்தண்டு அழுகல் | மரத்திற்கு 30 மி.லி மண்ணில் |
| மலைப் பகுதி பயிர்கள் | வேரழுகல் | ஹார்சியானம் — மண்ணில் இடுதல் |
பயன்படுத்தும் அளவு
மரப் பயிர்கள்: மரத்திற்கு 30 மி.லி / 60 கிராம் மண்ணில். கிடைக்கும் அளவுகள்: 500 மி.லி • 1 லிட்டர் • 5 லிட்டர் • 1 கிலோ
கவனிக்க வேண்டியவை
செய்ய வேண்டியவை
- நடவுக்கு முன் விதை / நாற்று / கிழங்கு நேர்த்தி செய்யவும்
- மட்கிய எருவுடன் கலந்து ஈர மண்ணில் இடவும்
- சமவெளிக்கு விரிடி, மலைப் பகுதிக்கு ஹார்சியானம்
- சூடோ கேருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்
செய்யக் கூடாதவை
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- வறண்ட மண்ணில் இட வேண்டாம்
- பாக்கெட்டை வெயிலில் வைக்க வேண்டாம்
மனிதர்கள், கால்நடை, தேனீ, மண்ணுக்கு பாதுகாப்பானது — இரசாயனம் இல்லை, எஞ்சிய நச்சு இல்லை
இதே வகையில் மற்ற தயாரிப்புகள்
உயிர் நோய்க் கொல்லிசூடோ கேர்இலைப்புள்ளி, குலை நோய், வாடல் — பல நோய்களுக்கு ஒரே தீர்வு
உயிர் நோய்க் கொல்லிலீஃப் கேர்நோய்க் கொல்லி + உயிர் உரம் — இரண்டும் ஒன்றில்
உயிர் நோய்க் கொல்லிலீஃப் கார்ட்இலைப்புள்ளி, இலைக் கருகல், குலை நோய்க்கு
உயிர் நோய்க் கொல்லிமில்ட்யு கண்ட்ரோலர்சாம்பல் நோய்க்கு மட்டுமே — சிறப்பு மருந்து
உயிர் நோய்க் கொல்லிபிளான்ட் கேர்பாக்டீரியா & பூஞ்சாண நோய்கள் — இரண்டுக்கும்
உயிர் நோய்க் கொல்லிநெமடோட் ஹண்டர்வேர் முடிச்சு நூற்புழுக்களை அழிக்கும் பூஞ்சாணம்அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பயிர் வாரியான பருவம் பொது வழிகாட்டல் மட்டுமே — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment