Paddy — நெல் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

பயிர் வாரியான வழிகாட்டி

நெல் — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்

நெல் சாகுபடிக்கு பண்ணாரி தயாரிப்புகள்

நெல் சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.

உயிர் பூச்சிக்கொல்லிகள்

புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா

தயாரிப்புகட்டுப்படுத்தும் பூச்சிஎப்போது / எப்படி
லார்வா ஹண்டர்இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான்புழு தென்பட்டவுடன்
கிரப் ஹண்டர்இலை உண்ணும் புழு, தத்துப்பூச்சிதாக்குதல் ஆரம்பத்தில் தெளிக்கவும்
பெஸ்ட் ஹண்டர்தத்துப்பூச்சி (புகையான்)தூர்களின் அடிப்பகுதியில் தெளிக்கவும்
இன்செக்ட் கண்ட்ரோலர்இலை சுருட்டுப்புழு, தத்துப்பூச்சிதாக்குதல் ஆரம்பத்தில்
லார்வா டெர்மினேட்டர்இலை சுருட்டுப்புழு, படைப்புழுபுழு தென்பட்டவுடன்

உயிர் நோய்க் கொல்லிகள்

இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு

தயாரிப்புகட்டுப்படுத்தும் நோய்எப்போது / எப்படி
சூடோ கேர்குலை நோய், இலைக் கருகல்விதை நேர்த்தி + தூர் பருவத்தில் தெளிப்பு
லீஃப் கேர்இலைப்புள்ளி, துத்தநாகக் குறைபாடுவிதை நேர்த்தி + மண்ணில் இடுதல்
லீஃப் கார்ட்குலை நோய், இலைப்புள்ளிதூர் & கதிர் பருவத்தில்
பிளான்ட் கேர்இலைக் கருகல்நோய் தென்பட்டவுடன் தெளிப்பு

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு

தயாரிப்புபருவம் / நேரம்எப்போது / எப்படி
பயோசைம்தூர் கட்டும் & கதிர் பருவம்தெளிப்பு — 10 மி.லி / லி
பயோஜெல்நடவு (அடியுரம்)ஏக்கருக்கு 10 கிலோ
ஹியூமிக் K பிளஸ்அடியுரம் + தூர் பருவம்மண்ணில் 2–4 கிலோ / ஏக்கர்
பஞ்சகவ்யாதூர் & பூட்டை பருவம்தெளிப்பு — 30 மி.லி / லி
EM நுண்ணுயிர்கள்நடவு + தூர் பருவம்பாசன நீரில் 5–10 லி / ஏக்கர்

உயிர் உரங்கள்

தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்

தயாரிப்புஎப்போதுஎப்போது / எப்படி
நைட்ரோ பிக்ஸ் (அசோஸ்பைரில்லம்)நாற்றங்கால் & நடவுவிதை நேர்த்தி + நாற்று வேர் நனைத்தல்
P-சால்யுபிளைசர்நாற்றங்கால் & நடவுநாற்றங்காலில் 1 லி + வேர் நனைத்தல்
K-மொபிளைசர்விதைப்பு / நடவுவிதை நேர்த்தி + மண்ணில்
NPK கன்சார்டியாநாற்றங்கால் & நடவுவிதை நேர்த்தி + மண்ணில் 5 லி
சிலிக்கா சால்யுபிளைசர்நாற்றங்கால் & நடவுவிதை நேர்த்தி + மண்ணில் 2 லி

அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவை

இவை எந்தப் பயிருக்கும் பயன்படுத்தலாம் — மண் வளம், வளர்ச்சி, நோய் தடுப்புக்கு.

பொதுவான குறிப்புகள்

  • உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
  • இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
  • நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
  • உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு

அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்