Larva Terminator — லார்வா டெர்மினேட்டர் பயன்பாடு & அளவு

உயிர் பூச்சிக்கொல்லி

லார்வா டெர்மினேட்டர்

பேசிலஸ் துரின்ஜியன்சிஸ் (Bt) • Larva Terminator

Larva Terminator — லார்வா டெர்மினேட்டர் பாட்டில் மற்றும் பெட்டி

புழுக்களை அழிக்கும் இயற்கை ஆயுதம். பண்ணாரி அம்மன் நிறுவனத்தின் இந்த உயிர் பூச்சிக்கொல்லி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. கீழே எப்படி வேலை செய்கிறது, எந்தப் பயிருக்கு எப்போது, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை எளிய தமிழில் கொடுத்துள்ளோம்.

எப்படி வேலை செய்கிறது?

  1. தெளிக்கவும்இலையில் தெளித்த மருந்தை புழு இலையுடன் சேர்த்து உண்ணும்.
  2. உண்பது நிற்கும்குடலில் விஷப்புரதம் கரைந்து செரிமானத்தைத் தாக்கும் — பயிர் சேதம் உடனே குறையும்.
  3. புழு இறக்கும்2 முதல் 5 நாட்களில் புழு இறக்கும். மருந்து 3–7 நாள் செயலில் இருக்கும்.

படங்கள்

பயிர் வாரியாக பயன்பாடு

பயிர்கட்டுப்படுத்தும் பூச்சிஎப்போது தெளிக்க வேண்டும்
நெல்இலை சுருட்டுப்புழு, படைப்புழுபுழு தென்பட்டவுடன்
மக்காச்சோளம்படைப்புழு (அமெரிக்கன்)குருத்தின் உள்ளே நேரடியாக தெளிக்கவும்
தக்காளிகாய்ப்புழுபூக்கும் & பிஞ்சு பருவத்தில்
கத்தரிகுருத்து & காய் துளைப்பான்புழு துளைக்கும் முன், வாரம் ஒருமுறை
வெண்டைகாய் துளைப்பான்பிஞ்சு பருவத்தில்
மிளகாய்காய்ப்புழு, புரோடீனியாபூக்கும் பருவம் முதல்
முட்டைகோஸ்வைரமுதுகு அந்துப்புழுஇலையின் அடிப்பகுதியிலும் தெளிக்கவும்
பருத்திகாய்ப்புழுசப்பை உருவாகும் பருவத்தில்
பயறு வகைகள்காய்ப்புழுபூக்கும் & காய் பிடிக்கும் பருவத்தில்
நிலக்கடலைபுரோடீனியா, சுருள் பூச்சிஇலை சேதம் தென்பட்டவுடன்

தெளிக்கும் அளவு

1 லிட்டர் தண்ணீருக்கு7–10 மி.லி
10 லிட்டர் டேங்க்70–100 மி.லி
ஏக்கருக்கு கரைசல்150–200 லி

தேவைப்பட்டால் 7 நாள் கழித்து மீண்டும் தெளிக்கவும். கிடைக்கும் அளவுகள்: 500 மி.லி • 1 லிட்டர் • 5 லிட்டர் • 1 கிலோ

கவனிக்க வேண்டியவை

செய்ய வேண்டியவை

  • மாலை 4 மணிக்கு மேல் தெளிக்கவும் (வெயில் மருந்தை வீணாக்கும்)
  • சிறிய இளம் புழுக்கள் இருக்கும்போதே தெளிக்கவும்
  • இலையின் மேலும் அடியிலும் நன்றாக நனைய தெளிக்கவும்
  • ஒட்டும் திரவம் (Sticker) சேர்க்கவும்
  • கலந்த கரைசலை அன்றே பயன்படுத்தவும்

செய்யக் கூடாதவை

  • தாமிர / இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
  • முற்றிய பெரிய புழுக்களுக்கு பலன் குறைவு — தாமதிக்காதீர்
  • பாட்டிலை வெயிலில் வைக்க வேண்டாம்

தேனீ, கால்நடை, மனிதர்களுக்கு பாதுகாப்பானது — இரசாயனம் இல்லை

இதே வகையில் மற்ற தயாரிப்புகள்

வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு

அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பயிர் வாரியான பருவம் பொது வழிகாட்டல் மட்டுமே — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்