Grub Hunter — கிரப் ஹண்டர் பயன்பாடு & அளவு

உயிர் பூச்சிக்கொல்லி

கிரப் ஹண்டர்

மெட்டாரைசியம் • Grub Hunter

Grub Hunter — கிரப் ஹண்டர் பாட்டில் மற்றும் பெட்டி

வண்டுகள், வேர்ப்புழுக்களை அழிக்கும் பச்சைப் பூஞ்சாணம். பண்ணாரி அம்மன் நிறுவனத்தின் இந்த உயிர் பூச்சிக்கொல்லி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. கீழே எப்படி வேலை செய்கிறது, எந்தப் பயிருக்கு எப்போது, எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பதை எளிய தமிழில் கொடுத்துள்ளோம்.

எப்படி வேலை செய்கிறது?

  1. தெளிக்கவும்பூஞ்சாண வித்துக்கள் பூச்சியின் உடல் மேல் படிந்து ஒட்டிக்கொள்ளும்.
  2. உள்ளே வளரும்பூஞ்சாணம் உடலுக்குள் வளர்ந்து சத்துக்களை உறிஞ்சி, நச்சுப் பொருளை உருவாக்கும்.
  3. பூச்சி இறக்கும்உணவு, சுவாசக் குழாய் அடைபட்டு பூச்சி இறக்கும். இறந்த பூச்சி மேல் பூஞ்சாணம் தெரியும்.

படங்கள்

பயிர் வாரியாக பயன்பாடு

பயிர்கட்டுப்படுத்தும் பூச்சிஎப்போது தெளிக்க வேண்டும்
தென்னைகாண்டாமிருக வண்டுஎருக்குழிகளில் இடவும்
கரும்புவேர்ப்புழுநடவின் போதும் மண் அணைக்கும் போதும்
நிலக்கடலைவேர்ப்புழுவிதைப்பின் போது மண்ணில்
பாக்குவேர்ப்புழுமரத்தைச் சுற்றி மண்ணில்
மக்காச்சோளம்படைப்புழுகுருத்தின் உள்ளே தெளிக்கவும்
நெல்இலை உண்ணும் புழு, தத்துப்பூச்சிதாக்குதல் ஆரம்பத்தில் தெளிக்கவும்
காய்கறிகள்இலை உண்ணும் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிஇலை மேல் தெளிக்கவும்
மஞ்சள் / இஞ்சிவேர்ப்புழுநடவின் போது மண்ணில்
வாழைமண் வண்டுகள்நடவின் போது குழியில்

பயன்படுத்தும் அளவு

தெளிக்க10 மி.லி / லி
வயல் (ஏக்கர்)3 லி / 5 கிலோ
எருக்குழி (5 டன்)1 லி / 2 கிலோ
சொட்டுநீர் (ஏக்கர்)3 லிட்டர்

10 லிட்டர் டேங்குக்கு 100 மி.லி. கிடைக்கும் அளவுகள்: 500 மி.லி • 1 லிட்டர் • 5 லிட்டர் • 1 கிலோ

கவனிக்க வேண்டியவை

செய்ய வேண்டியவை

  • தெளிப்பு: மாலையில், பூச்சி மேல் படும்படி
  • மண்ணுக்கு: மட்கிய எருவுடன் கலந்து ஈர மண்ணில்
  • எருக்குழியில் இட்டால் காண்டாமிருக வண்டு பெருகாது
  • ஒட்டும் திரவம் (Sticker) சேர்க்கவும்

செய்யக் கூடாதவை

  • இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
  • தெளித்த பின் சில நாட்கள் பூஞ்சாணக் கொல்லி வேண்டாம்
  • பாட்டிலை வெயிலில் வைக்க வேண்டாம்

தேனீ, கால்நடை, மனிதர்களுக்கு பாதுகாப்பானது — இரசாயனம் இல்லை

இதே வகையில் மற்ற தயாரிப்புகள்

வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு

அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பயிர் வாரியான பருவம் பொது வழிகாட்டல் மட்டுமே — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.

Comments

Popular posts from this blog

Bannari VAM — பண்ணாரி வேம் (VAM) பயன்பாடு & அளவு

Panchakavya — பஞ்சகவ்யா பயன்பாடு & அளவு

Pulses — பயறு வகைகள் சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்