Banana — வாழை சாகுபடிக்கு பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
பயிர் வாரியான வழிகாட்டி
வாழை — பண்ணாரி இயற்கை இடுபொருட்கள்
வாழை சாகுபடியில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, வளர்ச்சி, சத்து மேலாண்மைக்கு பயன்படும் பண்ணாரி அம்மன் இயற்கை இடுபொருட்கள் — எந்தப் பிரச்சனைக்கு எது, எப்போது, எப்படி என்று கீழே தொகுத்துள்ளோம். தயாரிப்புப் பெயரைத் தொட்டால் முழு விவரம் கிடைக்கும்.
உயிர் பூச்சிக்கொல்லிகள்
புழுக்கள், வண்டுகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூஞ்சாணம் & பாக்டீரியா
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் பூச்சி | எப்போது / எப்படி |
|---|---|---|
| லார்வா ஹண்டர் | தண்டு துளைப்பான் | தண்டில் துளை தென்பட்டவுடன் |
| கிரப் ஹண்டர் | மண் வண்டுகள் | நடவின் போது குழியில் |
| கிரப் பைட்டர் | மண் வண்டுகள் | நடவின் போது குழியில் |
உயிர் நோய்க் கொல்லிகள்
இலைப்புள்ளி, வேரழுகல், வாடல், சாம்பல் நோய், நூற்புழுவுக்கு
| தயாரிப்பு | கட்டுப்படுத்தும் நோய் | எப்போது / எப்படி |
|---|---|---|
| சூடோ கேர் | வாடல் நோய் | கிழங்கு நேர்த்தி + மண்ணில் இடுதல் |
| ரூட் கேர் | வாடல், கிழங்கழுகல் | கிழங்கு நேர்த்தி + மண்ணில் இடுதல் |
| லீஃப் கேர் | வேரழுகல், வாடல் | கிழங்கு நேர்த்தி + மண்ணில் |
| லீஃப் கார்ட் | இலைப்புள்ளி | கீழ் இலைகளில் புள்ளி தெரிந்தவுடன் |
| நெமடோட் ஹண்டர் | வேர் நூற்புழு | கிழங்கு நடும் குழியில் |
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
வேர் வளர்ச்சி, பூ, காய் பிடிப்பு, மண் வளத்துக்கு
| தயாரிப்பு | பருவம் / நேரம் | எப்போது / எப்படி |
|---|---|---|
| பயோசைம் | 3 & 5வது மாதம் | தெளிப்பு + நீர்ப்பாசனம் |
| பயோஜெல் | நடவு + 3வது மாதம் | மரத்தைச் சுற்றி வேர்ப் பகுதியில் |
| ஹியூமிக் K பிளஸ் | நடவு + 3வது மாதம் | நீர்ப்பாசனத்தில் கரைத்து |
| பஞ்சகவ்யா | 3, 5, 7வது மாதம் | தெளிப்பு + நீர்ப்பாசனம் |
| EM நுண்ணுயிர்கள் | மாதம் ஒருமுறை | பாசனத்தில் 5–10 லி / ஏக்கர் |
உயிர் உரங்கள்
தழை, மணி, சாம்பல் சத்து — 25% இரசாயன உரம் மிச்சம்
| தயாரிப்பு | எப்போது | எப்போது / எப்படி |
|---|---|---|
| P-சால்யுபிளைசர் | நடவின் போது | மண்ணில் 2 லி / 4 கிலோ |
| K-மொபிளைசர் | நடவு + 3வது மாதம் | மண்ணில் 2 லி / 4 கிலோ |
| NPK கன்சார்டியா | நடவின் போது | கிழங்கு நேர்த்தி + மண்ணில் |
| சிலிக்கா சால்யுபிளைசர் | நடவின் போது | கிழங்கு நேர்த்தி + மண்ணில் |
| பண்ணாரி வேம் (VAM) | நடவின் போது | நடவு குழியில் |
பொதுவான குறிப்புகள்
- உயிர் மருந்துகளை மாலை நேரத்தில் தெளிக்கவும்
- இரசாயன பூஞ்சாணக் கொல்லியுடன் கலக்க வேண்டாம்
- நோய், பூச்சி தொடக்கத்திலேயே பயன்படுத்துவது சிறந்தது
- உயிர் உரங்களை மட்கிய எருவுடன் கலந்து இடவும்
வாங்க / ஆலோசனைக்கு அழையுங்கள்
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அன்னை ஆர்கானிக் — 3/4, Manbarai, துறையூர் • GPay வசதி உண்டு
அளவுகள் பண்ணாரி அம்மன் தயாரிப்புக் கையேட்டின்படி. பருவ நேரங்கள் பொது வழிகாட்டல் — உங்கள் வயலுக்கு ஏற்ற ஆலோசனைக்கு எங்களை அழையுங்கள்.
Comments
Post a Comment